Close
நவம்பர் 21, 2024 8:27 மணி

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் “உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” சிறப்புத் திட்டமுகாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று மனு பெறுகிறார், ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்  தலைமையில் (31.01.2024) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி , மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு வரும் ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் “என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.

அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம்,சித்திரக்குடி ஊராட்சியில் செயல்படும் பொது விநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டார், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வுசெய்தும், பயிர் சாகுபடி குறித்த கள ஆய்வுசெய்தார்.

பூதலூர் ஒன்றியம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை சரிபார்த்து,அக்கட்டிடத்தில் செயல்படும் இ-சேவை மையத்தின்செயல்பாடுகள்குறித்தும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு பொதுவிநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்தும், விவசாயிகளிடம் பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பூதலூர் வட்டம், சித்திரக்குடி ஊராட்சியில் உள்ள வள்ளுவர் ஆதரவற்றோர் இல்லத்தில் கோப்புகளை பார்வையிட்டு,  இல்லத்தில் தங்கிப் பயிலும் மாணவியர் களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பூதலூர் ஒன்றியத்தில் செயல்படும் வேளாண்மை விரிவாக்கம் மைய விதை கிடங்கில் உள்ள இடுபொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை கணினியில் பதிவேற்றம் குறித்தும், சந்தை பொருட்களை தரம் அளவிடுதல் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து கேட்டறிந்தார்.

இப்பள்ளியில் பயிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சியினையும் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாரனேரியில் முதலமைச்சரின் சிறப்பு கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும்ஆய்வு செய்து, அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும்உணவின் தரம் குறித்துபோன்ற பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கள ஆய்வு செய்தார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் முகாம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, காவல் நிலையத்தில் போக்குவரத்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப் படுவதை  ஆட்சியர் தீபக் ஜேக்கப்  ,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பணிகளை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, பூதலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார்.

இந்தநிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்றஉறுப்பினர் துரை.சந்திரசேகரன், கூடுதல்ஆட்சியர்(வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி ,வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) மோகன்.

வேளாண்மை இணை இயக்குநர் வித்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அப்துல்மஜீத் ,பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர்  ச.அரங்கநாதன்(எ) கல்லணை செல்லக்கண்ணு , பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top