Close
நவம்பர் 21, 2024 1:54 மணி

இளஞ்சிறாருக்கான ஒரு நாள் இன்பச் சுற்றுலா! தொடங்கி வைத்த ஆட்சியர்

இன்ப சுற்றுலாவாக இளஞ்சிறார்களை வழி அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலையில் இளஞ்சிறாருக்கான இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட  பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து ஆறு வயது உட்பட்ட இளஞ்சிறாருக்கான புத்துணர்வு நிகழ்வாக இலவசமாக செஞ்சி கோட்டைக்கு ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 53 குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் 12 சிறப்பாசிரியர்களும் இணைந்து செல்லும் வகையில் சுற்றுலா பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது . இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நல திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top