வேலூர் தொகுதி மக்களுக்காக 27,000 சதுர அடியில் இலவச திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி, ரயில்வே மேம்பாலம் அருகே 27,000 சதுர அடியில் வேலூர் தொகுதி மக்களின் நலனுக்காக இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ சேவை மையம், இலவச கணினி பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு தகவல் மையம் உள்ளிட்ட கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ஏ.சி.எஸ் கல்வி குழும நிறுவனரும், புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வருகை புரிந்து பேரூரையாற்றி, இலவச திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் சுந்தர், பிரபல திரைப்பட நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் கலந்து கொண்டு, ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் தொகுதியில் தொடர்ந்து செய்து வரும் பொதுமக்கள் சேவை குறித்து வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில், தலைமை அறங்காவலர் லலிதா லட்சுமி, ஏசிஎஸ் கல்வி குழும நிர்வாகிகள், புதிய நீதிக்கட்சி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏசிஎஸ் குழும தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.