Close
ஜூலை 4, 2024 3:57 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கை குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,ஆரணி ,செய்யாறு பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து 646 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த பொதுமக்கள் குறை நினைவு நாள் கூட்டத்திற்கு கீழ்பெண்ணாத்தூர், செங்கம், போளூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் அரசு அலுவலர்களைக் கொண்டு மனு எழுதி அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை அமர வைத்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் கை குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பால் வழங்கும் திட்ட மூலம் பால் வழங்கினார்.
தொடர்ந்து குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்திருந்த மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஐந்து மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஒரு மாற்றுத் திறனாளி நபருக்கு கைப்பேசி என ரூபாய் 5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 52 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 46 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top