சோழவந்தான் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயின்று வருகின்றனர்.
இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெல்ட் வழங்கும் விழா, இங்குள்ள சந்திரன் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, பள்ளியின் நிர்வாகி மாஸ்டர் சசிகுமார் தலைமை தாங்கினார்.
மாஸ்டர் சின்னதுரை முன்னிலையில் வகித்தார். ஜூனியர் மாஸ்டர் அர்ஜுன் வரவேற்றார். சோழவந்தான் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் முன்னாள் நிர்வாகபரம்பரை அறங்காவலர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி. பெருமாள் அங்கீகாரம், பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் நிர்வாகி சசிகுமார் கூறும் பொழுது: விடுமுறை கால சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. இதில், சிலம்பாட்டம், யோகா உள்பட தமிழன் வீர விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார்.