Close
ஜூலை 7, 2024 10:20 காலை

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்.

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்.

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை ஏப்.1 தேதி முதல் அமல்படுத்தப் பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்க றிஞர்கள் தங்களது வழக்குகளை  பதிவு செய்வதில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து வழக்குரைஞர்களும் தங்களது வழக்குகளை கணினி வலைத்தளம் மூலம்தான் பதிவு செய்ய வேண்டும்.  இப்புதிய நடை முறையைக் கண்டித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்குறைஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து  திருவொற்றியூர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணி கூறியது,

காலத்திற்கு ஏற்ப நவீன நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகள் நீதிமன்றங்களிலும்,  அனைத்து வழக்குரைஞர்களிடம் இல்லாத நிலையில் கட்டாயப்படுத்தி அமல்படுத்துவது சரியல்ல. எனவே புதிய நடைமுறையை அமல்படுத்தும் அதேவேளையில் பழைய முறையையும் வழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இதன் மூலம் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  திருவொற்றியூரில் குற்றவியல் நடுவர், உரிமையியல், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 3 நீதிமன்றங்கள் ஓரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. மூன்று நீதிமன்றங்களுக்கும் நீண்ட காலமாக நிரந்தரமாக நீதிபதிகள் நியமிக்கப்படாத நிலைமை உள்ளது.

மேலும் திருவொற்றியூர் நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த வளாகம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் வழக்குரைஞர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  எனவே புதிய நடைமுறையை வேகவேகமாக அமல்படுத்துவதைக் கைவிட்டுவிட்டு போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் சுப்பிரமணி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top