திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ, அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமுமுக வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 பேர் போட்டியிடுகிறார்கள்.
சுயேச்சை வேட்பாளர்களில் முக்கியமானவர் எஸ். தாமோதரன். கிராமாலயா தொண்டு நிறுவன இயக்குனரான இவர் கிராமப்புறங்களில் சுகாதாரத்திற்காக செய்த சேவைக்காக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பாராட்டி உள்ளது.
தேர்தல் நாளான இன்று தாமோதரன் திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப் பள்ளியில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்து வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளார். வாக்கு பதிவு செய்துவிட்டு வெளியே வந்த தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘மண்ணின் மைந்தரான நான் பேச்சை வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறேன். ஏற்கனவே சுகாதாரப் பணிகளுக்காக கிராமப்புறங்களில் அதிக சேவைகள் செய்து உள்ளேன். அந்த வகையில் மக்களுக்கும் எனக்கும் நல்ல நேரடி தொடர்பு உள்ளது. ஆதலால் மக்கள் என்னை வேட்பாளராக அல்லாமல் சமூக சேவகனாக தான் பார்த்தார்கள் பிரச்சாரத்தின் போது இது கண்கூடாக தெரிந்தது. அந்த வகையில் எனக்கு ஏராளமான வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறேன்’என்றார்