திருச்சி சேவாசங்கம் பள்ளியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைப்பெற்றது.
திருக்குறள் தூயரும், தஞ்சை திருக்குறள் முற்றோதல் நிறுவனருமான கோபிசிங் ஐயாவையும், அவரது திருக்குறள் இளவரசர்கள் மற்றும் இளவரசிகளையும் சந்தித்து கௌரவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
கோபிசிங் ஐயாவின் தமிழ் தொண்டும், திருக்குறள் சார்ந்து நாளும் யோசித்து செயல்படுகிற பாங்கும் வியக்க வைக்கிறது. இளம் மழலை செல்வங்களிடத்தில், உலக பொதுமறையை கொண்டு செல்கிற அவரது பணி மகத்தானது.
கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் பாமர தமிழனான எனக்கு, ஐயா அவர்கள் பயிற்றுவித்து, பள்ளிக்குழந்தைகள் வாயிலாக வெளியிடுகிற அனைத்து பதிவுகளும் ஏதாவது ஒன்றை எளிமையாய் சொல்லி செல்கிறது.
தமிழுக்குத் தொண்டு செய்தவன் மரணிப்பதில்லை என்கிற வரிகள் நினைவிற்கு வருகிறது..நல்லதொரு தலைமுறையை உருவாக்கும் அருமையான, ஆக்கபூர்வமான முயற்சி.வாழ்த்துகள்..
தங்கள் பிள்ளைகள் திருக்குறளை கற்று, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முனைப்புடன், முழு ஈடுபாட்டுடன் பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருவது, ஊக்கமூட்டுவது நமக்கு சிலிர்ப்பை தருகிறது. இதயத்திலிருந்து வெளிவரும் இயல்பான வார்த்தைகளால் அவர்களை வாழ்த்துகிறோம்.
நமது மொழியின் வலிமையை வளமையை இந்த இளைய தலைமுறை களுக்கு சொல்லித் தருவோம்.மெல்ல தமிழ் இனி…, மிளிரும்..
# திருச்சியிலிருந்து சங்கர்🎋#