Close
ஏப்ரல் 3, 2025 11:35 மணி

சோழவந்தானில் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம்

சோழவந்தான் சி.எஸ்.ஐ. பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி, காளவாசல் சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறை சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சோழவந்தான் அரவிந்த் ஆரம்பக் கண் பரிசோதனை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, சோழவந்தான் 24 மணை தெலுங்கு செட்டியார்கள் சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னையா, கோபால், வீரமாரி பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை, தங்கமயில் ஜுவல்லரி செல்வம் துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில், 300-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top