Close
நவம்பர் 21, 2024 1:40 மணி

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் திருவாச்சி திருட்டு! போலீசார் விசாரணை

சோழவந்தான் வைகை கரையில் உள்ள சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சகர் இரவு கோவிலை பூட்டி வீட்டுக்குச் சென்று விட்டார்.

அவர் எப்பொழுதும் போல் காலை ஆறு மணி அளவில் கோவில் கதவை திறக்க வந்தார். அப்போது கதவு பூட்டு உடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோவில் தக்கார் இளமதிக்கு தகவல் கொடுத்தார்.

இதன் பேரில் தக்காரும் கோவில் பணியாளர் பூபதியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது மேற்கு வாசல் கதவு பூட்டு உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று சனீஸ்வர பகவான் சன்னதி கதவின் பூட்டை உடைத்து சனீஸ்வர பகவான் பின்னால் உள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து சோழவந்தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி, காவல் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமரா இயக்கக்கூடிய சாதனங்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், மர்ம கும்பல் தங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சிசிடிவி கேமரா சாதனங்களை சேதப்படுத்தி உள்ளனர். சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மர்ம நபர்கள் வந்திருக்க கூடும்.  ஏற்கனவே இக்கோவிலில் வந்து நோட்டமிட்டு சென்று இருப்பார்கள், சனீஸ்வர பகவான் பின்னால் இருக்கக்கூடிய திருவாச்சி முற்றிலும் வெள்ளியாக இருக்க கூடும் என்று நினைத்து திருடிச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top