Close
ஏப்ரல் 4, 2025 11:34 காலை

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ். பி .எம். டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது .
முகாமிற்கு, டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார் . ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் முன்னிலையில் வைத்தார் . எஸ் .பி .எம். மருத்துவ அலுவலர் ஹரிஷ் வரவேற்றார் .
முகாமில், வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள் அமிர்தா, மகாலட்சுமி ஆகியோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து கண்பார்வை கண் நரம்பு பரிசோதனை ஒளி த்திறன் பரிசோதனை, விழித்திரை பரிசோதனை , கண் நரம்பு பரிசோதனை மற்றும் கிட்ட பார்வை தூரப்பார்வை ஒளி விலகல் போன்ற கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்து
வமனைக்கு, அனுப்பப்பட்டனர் .

முடிவில், மக்கள் தொடர்பு அலுவலர் சந்தனகுமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top