மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். இன்றுடன் 1185நாள் நிறைவடைந்த இந்நாளில், இன்று ஆடி அமாவாசை என்பதால், பூங்கா முருகன் கோவில் அருகே உள்ள சாலையோ வாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் மதிய உணவினை வழங்கினார்.
அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கூறும்போது: உலகத்தில் மனதிற்கு இன்பம் அளிப்பது கொடுப்பதில் தான் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 1185நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கிறோம் என்றும், இந்த அட்சய பாத்திரம் நிறுவனம் தொடர்ந்து உணவு தானம் வழங்கிட தொழிலதிபர்கள், நிறுவனர்கள், மேலாளர்கள், அலுவலர்கள் உதவ வேண்டும் என்றார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்
