Close
நவம்பர் 22, 2024 3:18 காலை

திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்தது

திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்  தலைமை தாங்கினார். மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ்  முன்னிலை வகித்தார். நிகழ்வில் டாக்டர். ஜெயந்தி தியாகராஜன், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.பி.நரேன், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கோகிலா, ஸ்டெல்லா, சத்யா, தெரேசா, பானுமதி, ஜெனிஃபர், கனகஜோதி, சமீரா பானு, நஜ்ரியா பேகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதிகளில் அதிகப்படியான மகளிரை உருவாக்குதல், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குதல், இளையோர்களுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுத்தல், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று கூறிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச் ராஜாவை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் 17.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

எனவே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் (RGPRS), சிறுபான்மை பிரிவு, பட்டதாரி அணி, எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு , ஆராய்ச்சி பிரிவு, NGO பிரிவு ,மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, கலைப்பிரிவு , மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் பிரிவு ,மனித உரிமை பிரிவு , துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top