சோழவந்தான் மேல ரதவீதி ஆனந்த மஹால் தமிழ் பெரும் புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தினவிழா, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் நோட்புக் எழுதுபொருள் வழங்கும் விழா நடந்தது.
இவ்விழாவிற்கு தலைவர் எஸ் எஸ்முருகேசன் தலைமை தாங்கினார். நிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார். கௌரவத் தலைவர் ராஜகுமாரன், தலைவர் சுகுமார், அறக்கட்டளை நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், முன்னாள் சேர்மன் எம்.கே முருகேசன், வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் ஆகியோர் 10ம் வகுப்பு 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கினர்.
முன்னாள் விஏஓ கிருஷ்ணமூர்த்தி இலக்கிலார் ஐயப்பன், அருணாசலம், முன்னாள் சேர்மன் ஐயப்பன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் எழுதுபொருள் ஆகியவற்றை வழங்கினர்.
ஆசிரியர்கள் சண்முகவேல், முருகேசன், விவேகானந்தா கல்லூரி தமிழ் பேராசிரியர் முத்தையா ஆகியோர் பேசினார்கள். அறக்கட்டளை நிர்வாகி தமிழரசன் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக அரசஞ்சண்முனார் திருவுருவட் சிலை மற்றும் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். சோழவந்தான்அரசஞ் சண்முகனார் வழித்தோன்றல்கள் செண்பகம்பள்ளி முத்துப்பள்ளி பங்காளிகள் அறக்கட்டளையினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், பாலசுப்பிரமணி, சிவா, பாலு,சரவணன், நூலகர் துரைச்சாமி, விவசாய முன்னாள் அலுவலர் மாணிக்கம், சோமசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.