Close
நவம்பர் 21, 2024 7:13 மணி

பொதுமக்களிடம் குறைகேட்ட திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மேயர் அன்பழகன் உத்தரவிட்டார்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, துணை ஆணையர் திரு. கே. பாலு , நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டத் தலைவர்கள் துர்காதேவி , விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர்  மணிவண்ணன் , செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top