Close
அக்டோபர் 3, 2024 7:21 மணி

திருச்சியில் நடைபயண யாத்திரை சென்ற காங்கிரசார்

திருச்சியில் காங்கிரசார் நடைபயண யாத்திரை சென்றனர்.

நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்பியை தொடர்ந்து விமர்சித்து வரும் பாரதீய ஜனதா கட்சி தலைமையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபயண யாத்திரை  நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்து இருந்தார்

இந்த அறிவிப்பின்படியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. யில் இருந்து காட்டூர் கைலாஷ் நகர் வரை நடைபயணம் மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கோட்டத் தலைவர்கள் அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், தெற்கு மாவட்டத் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், புள்ளம்பாடி முன்னாள் சேர்மன் ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட நிர்வாகிகள் மாரீஸ்வரி, சேக்  தாவுத், கருப்பையா, பாலு, ஜான் பிரிட்டோ, ராஜாமணி, பாலமுருகன், பூக்கடை பன்னிர், முகமது ஹக்கீம், அன்பு ஆறுமுகம், கோட்டத் தலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் கிருஷ்ணா, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, சுப்ரமணியபுரம் எட்வின் ராஜ், பஞ்சப்பூர் மணிவேல், ஏர்போர்ட் கனகராஜ், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செளஸ், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், மாணவர் காங்கிரஸ் தலைவர் வி.பி.நரேன், ஐடி விங் லோகேஷ் ,அரிசி கடை டேவிட், கிளமெண்ட்,. ஒபிசி ரியாஸ், ஹரிஹரன், அருள், ஜோன்ஸ், அஸ்லாம், கோகிலா, பெல்ட் சரவணன், கண்ணன், ஆரிப், பாண்டியன், நடராஜன், லட்சிமியம்மா, தனம், கல்யாணி, பழனியம்மாள், மல்லி, சரசு, விஜய் பக்தன், பாதயாத்திரை நடராஜன்  உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர். நடைபயண இறுதியில் தலைவர்கள் சிறப்புரையாற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top