Close
டிசம்பர் 3, 2024 4:45 மணி

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை விழா: விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக புகழ்வாய்ந்த ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிமனை தொடங்கி 98 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பணிமனை முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் ஆயுதபூஜையின் முந்திய நாள் வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும்.

பணிமனையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து, அலங்காரங்கள் செய்து வேலை செய்யும் ஆயுதங்கள் வைத்து, பொரி, பொட்டுக்கடலை, சுண்டல் ,இனிப்புகள் வைத்து வந்தவர்களுக்கு வணங்கினார்கள் ..இதில் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், வட மாநில பெண்கள், குழந்தைகள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் வந்து பணிமனை சுற்றி பார்த்தார்கள்.

சென்ற ஆண்டு (2023) தண்ணீர் அமைப்பு சார்பில் டீசல் பிரிவில் ஒரு பகுதியில் துணிப்பை, மரக்கன்று, புத்தகங்கள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. இந்த ஆண்டு (2024) விதைப்பந்து, பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக “பிளாஸ்டிக் என்ற எமன் ” என்ற புத்தகத்தை கொடுத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இதில் டீசல் பிரிவு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், பெரியசாமி , செந்தில்நாதன், ராஜகோபால் ,உதயகுமார், காளியப்பன், மகேந்திரன், உலகநாதன் அருணாச்சலம், செல்வராஜ், மார்டின் , மணிகண்டன், உத்திரவேல் ,பத்மநாபன், ஜஸ்டின் திருமுருகன், நளினி, திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top