Close
நவம்பர் 1, 2024 10:28 காலை

சோழவந்தான் பகுதியில் வேளாண்துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு

சோழவந்தான் மற்றும் மன்னடிமங்கலம் பகுதிகளில், விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், தமிழ்நாடு பாசன நவீனப்படுத்தும் திட்டத்தின் வேளாண்மை துறையின் கூடுதல் இயக்குனர் கண்ணையா, வேளாண்மை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் நுண்ணுயிர் பாசன திட்டம் மற்றும் மேரி ஐரின் ஆக்னிட்டா மாநிலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

சோழவந்தான் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்களை வேளாண்மை கூடுதல் இயக்குனர் கண்ணையா ஆய்வு செய்தார். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மன்னாடிமங்கலத்தில் தரிசு நிலத் தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு செய்த தொகுப்பு விவசாயிகளிடம் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சோழவந்தான் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் விதை சுத்திகரிப்பு மற்றும் சான்று அட்டை பொருத்தும் பணிகள் மற்றும் விதை இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, வேளாண்மை அலுவலர்கள் சத்தியவாணி மற்றும் டார்வின் துணை வேளாண்மை அலுவலர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டார்.

ஆய்வுக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் விக்டோயா செலஸ், தங்கையா மற்றும் பாண்டியராஜன் செய்திருந்தனர். இதில், தரிசுநில விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top