Close
நவம்பர் 14, 2024 4:56 காலை

பிரதமரின் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு வருகிற 11ம் தேதி சேர்க்கை முகாம்..!

தேசிய அப்ரெண்டிஸ்ஷிப் -கோப்பு படம்

நாமக்கல் :

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (என்ஏபிஎஸ்) மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் கீரம்பூரில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில், வருகிற 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ படித்து, வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து, இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ-2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (சிஓஇதொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறலாம்.

தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுநர்களின் இடங்களை நிறைவு செய்யும் வகையில், தங்கள் நிறுவன போஸ்டர்களுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களை அறிய, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி எண்கள் 04286 – 290297, 79041 11101, 94990 55842) மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top