நாமக்கல் :
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் புறநகர் பேருந்துகளும் மற்றொரு பகுதியில் டவுன் பஸ்களும் மற்றொரு பகுதியில் மினி பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்லும் மெயின் ரோடு, கோட்டை ரோடு, பரமத்தி ரோடு, மோகனூர் ரோடு என அனைத்தும் குறுகலான ரோடுகளாக உள்ளதாக பீக் அவர் நேரத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்பலனாக நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே முதலைப்பட்டியில் ரூ.19.52 கோடி மதிப்பில் புதிதாக மாநகராட்சி பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாளை 10ம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும் என கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், பழைய பஸ் நிலையத்திலிருந்து ராசிபுரம் சென்று திரும்பும் அனைத்து டவுன் பஸ்களும் புதிய பஸ் நிலையம் செல்லும். பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை என அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 117 முறைகள் இயக்கப்படும்.
பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் டவுன் பஸ் கட்டணம் ரூ.7 எனவும், மொபசல் பஸ்களில் சாதாரண கட்டணம் ரூ.7 எனவும், எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் ரூ.10 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஈரோட்டில் இருந்து வரும் பஸ்கள் நாமக்கல்-திருச்செங்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட கலெக்டர் உமா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.