Close
நவம்பர் 21, 2024 2:11 மணி

நாமக்கல் புதிய பஸ் நிலையத்தின் செயல்பாடு : அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு..!

நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் இனிப்பு வழங்கி வரவேற்றார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர்.

நாமக்கல் :
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, முதலைப்பட்டியில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் இந்த பஸ் நிலையத்தை நேரில் வந்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று 10ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல், நாமக்கல் நகருக்கு வந்து செல்லும் அனைத்து வெளியூர் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

புதிய பஸ் நிலையத்தில் 51 பஸ்கள் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 3 பயணிகள் காத்திருப்பு பகுதி, 1 தாய்மார்கள் பாலுட்டும் அறை, 1 டிரைவர்கள் ஓய்வு அறை, 1 நேரம் காப்பாளர் அறை, 1 பொருள் வைப்பு அறை, 1 துப்புரவு பிரிவு அலுவலகம், 1 மின்வாரிய அறை, 2 ஏ.டி.எம், 1 போலீஸ் அறை, 1 பொது சேவை பிரிவு, 200 எண்ணிக்கையில் டூ வீலர் பார்க்கிங், 60 கார்கள் நிறுத்தும் வசதி, குடிநீர் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் புதிய பஸ் நிலையத்திற்கு வருகை தந்து, பஸ்கள் இயக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கலெக்டர் உமா தலைமையில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி அறிவு சார் மையத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 2 பேருக்கு அமைச்சர் மதிவேந்தன் நினைவு பரிசு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top