Close
நவம்பர் 21, 2024 3:17 மணி

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டும் : தேர்தல் கமிஷன் பார்வையாளர் அறிவுரை..!

நாமக்கல்லில் நடைபெற்ற வாக்காளர் பட்டியில் திருத்தம் தொடர்பான ஆலேசனைக் கூட்டத்தில், தேர்தல் கமிஷன் பார்வையாளர் மகேஷ்வரன் பேசினார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல் :
18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் கூறினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழக உப்பு கழக மேலாண் இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் கமிஷன் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.

அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பட்டியலைப் பெற்று அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் வகையில், 80 வயதிற்கு மேற்பட்ட வயதானர்கள், மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களது இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஓட்டு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், கடந்த தேர்தல்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓட்டுப்பதிவை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில், பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு, பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்காக வரும், 16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அவற்றை, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.ஓ., சுமன், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top