Close
நவம்பர் 21, 2024 6:21 மணி

பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது திருச்சி நகரின் பல பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் நலசங்க நிர்வாகிகள் மேயரை சந்தித்து தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை விரைவாக தீர்க்க கோரி மனுக்களை கொடுத்தனர்.

பெரும்பாலான பகுதிகளி்ல் மழை நீர் வடிகால் இல்லை, இருக்கும் பகுதிகளிலும் மழை நீர் முறையாக வடிந்து செல்ல வசதியாக அவை தூர்வாரப்படவில்லை என கூறி மனு கொடுக்கப்பட்டது.

மேலும் புறநகர் பகுதிகளில் உள்ள காலி மனைகளில் புதர் மண்டி தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை ஏற்படுகிறது. எனவே கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் அன்பழகன் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top