Close
நவம்பர் 14, 2024 4:48 காலை

கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் : கால்நடை மருத்துவ கல்லூரியில் எம்.பி. ஆலோசனை..!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சைப் பிரிவை, மாதேஸ்வரன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் :

நாமக்கல் பகுதியில் கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் குறித்து, கால்நடை மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் எம்.பி. மாதேஸ்வரன் ஆலோசனை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ராசிபாளையம் கிராமம், சின்னமரத்துபட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். திடீரென்று நோய் தாக்கியதால் அவருக்கு சொந்தமான 6 மாடுகள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இறந்தன.

இதையொட்டி நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ராசிபாளையத்திற்கு நேரில் சென்று, விவசாயி சுப்பிரமணியை சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் அவர், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று, மாடுகள் இறந்ததற்கான காரணம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்து எம்.பி. மாதேஸ்வரன், கால்நடைகளுக்கு பரவும் நோய்களை தடுப்பது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வராஜ், சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன், சிகிச்சைத்துறை பேராசிரியர்கள் கதிர்வேல், பொன்னுசாமி, பழனிச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டுவந்திருந்த விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்ராஜா, நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மோகனூர் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top