Close
நவம்பர் 14, 2024 10:24 மணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டுகோள்..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல்:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில், திமுக நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு தலைமை தேர்தல் கமிஷன் மூலம், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்திட நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் இந்த 2 நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அதற்கான படிவங்களை வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து, அந்தப்படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்கவேண்டும்.

இந்த சிறப்புமுகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், தி.மு.க. தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ராசிபுரம் சட்டசபை தொகுதி தொகுதி பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, நாமக்கல் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் முனவர்ஜான் ஆகியோர் அவரவர்களுக்கு உட்டபட்ட பகுதிகளில் கலந்துகொள்வார்கள்.

அந்தந்த பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகள் ஆகியோர் தங்களை முழுமையாக வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கிளை, வார்டுகழக செயலாளர்கள், பிரதிநிதிகள், பிஎல்2 ஏஜெண்டுகள் தங்களுக்கு உட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top