Close
மே 18, 2025 1:52 காலை

அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு வாந்தி..!

108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியை மற்றும் மாணவ மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு  வாந்தி மற்றும் வயிறு பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அம்மாபாளையம், தானகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளான மதுமிதா, ஜெகநாதன், சிலம்பரசன், அபிநயா, லித்திகா, ஹரிகரன், ஜமுனா, சற்குணநாதன் மற்றும் ஆசிரியை அகிலா  ஆகியோா் முட்டையுடன் மதிய உணவை சாப்பிட்டார்களாம்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் மாணவா்கள் அனைவருக்கும் வயிற்று வலி, தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதாம். ஆசிரியை அகிலாவுக்கும் இதே பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்  மூலம் ஆசிரியை மற்றும் 8 மாணவ, மாணவிகள் மேல்பெண்ணாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, மாணவா்கள், ஆசிரியை ஆகியோரை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத், மாவட்ட சத்துணவு அலுவலா் உள்ளிட்டோா் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னா், ஆசிரியை, மாணவ, மாணவிகள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.  தற்போது மாணவ மாணவிகள் ஆசிரியை உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top