Close
நவம்பர் 15, 2024 2:52 மணி

திருச்சி மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில்  2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி  மாணவ, மாணவிகளை கொண்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன் , திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இப்பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டது. உறையூர் மெத்தடிஸ்ட் பள்ளி வளாகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி உறையூர் கடைவீதி வழியாக, உறையூர் காவல் நிலையம், மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டிவளாகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ,மாணவிகள் வழங்கினர்.

மேலும், 2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு நவம்பர் 16 ,17 மற்றும் நவம்பர் 23, 24 ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் உதவி வருவாய் அலுவலர் தாமோதரன் மற்றும் மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள்,மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top