Close
நவம்பர் 18, 2024 1:32 காலை

சிவகங்கையில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்

அமைச்சர் பெரிய கருப்பன் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் கீழ்
இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள,
”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்க விழாவில்,
வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி
மையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பங்கேற்று, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் துறையின் கீழ் இரண்டாம்
கட்டமாக ”ஊட்டச்சத்தை
உறுதி செய்”
திட்டத்தை துவக்கி வைத்து உள்ளார்.

இதனையொட்டி சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடிமையத்தில், கூட்டுறவுத்
துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட
ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில்,
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் பங்கேற்று, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், கர்ப்பிணித்
தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் முன்னோடி திட்டமான முதலமைச்சர் காலை உணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும், இளம் சிறார்களுக்கு
இணை உணவுகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும், மழலைச் செல்வங்களுக்கும் ஆரோக்கியமான உணவுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் முதற்கட்டமாக கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் தமிழகத்தில் சுமார் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்தில், தமிழகம் முழுவதும் தற்போது, 76,705 ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின்
நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டமானது ரூ.22 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர்,
அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி
குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டத்தில்  பிறப்பின் போது கடுமையான மற்றும் மிதமான எடை குறைபாடுடன் பிறந்த 850 குழந்தைகளின் தாய்மார்களுக்கு இன்றையதினம் இரண்டாம் கட்டமாக தொடங்கி ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 1,149 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வும் தொடங்கி வைக்கப்படுகிறது.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மொத்தம் 1,552 அங்கன்வாடி மையங்களின்
வாயிலாக, கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்தது முதல் 6 வயது வரையிலான (0-வயது முதல் 6-வயது வரை) 3,13,931 குழந்தைகளுக்கு சத்துமாவு, முட்டை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதில், 4,062 குழந்தைகள் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துப்பெட்டகங்கள் (Nutri Kit), சிறப்பு ஊட்டச்சத்து உணவு (Ready To Use Therapeutic Food – RUTF) மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் (Fortified Biscuits) வழங்கப்பட்டு, அவர்களது ஊட்டச்சத்து நிலை மேம்படுத்
துவதற்கான நடவடிக்கைகளும் மேற்
கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அக்குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் துறை
வாயிலாக, தினந்தோறும் ஊட்டச்சத்தை அதிகரிக்கக்கூடிய சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு,
மாவட்ட திட்ட அலுவலர், சுகாதார துறையை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், குழந்தை வளர்ச்சித்
திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்களால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு மாதந்தோறும்
ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவைகள் அளவீடுகள் செய்து தற்போது இயல்பு நிலைக்கு வரப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டத்தின்படி பயன்பெற்று வரும், பயனாளிகள் தங்களது பயன்கள் குறித்து இங்கு மனம்நெகிழ எடுத்துரைத்துள்ளனர்.இதுவே, திட்டத்தின் வெற்றி ஆகும். இதுபோன்று, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் விதமாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற சிறப்புத் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் ,
தமிழகத்தில் செயல்படுத்தி, குழந்தைகளின் நலன் காத்து வருகிறார்கள் .

இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்
திட்ட அலுவலர் முத்துமாரியப்பன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சிஎம்.துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top