திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட ;ட உதவித்தொகைகள் பெறுவது தொடர்பான
மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி
வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளர்நல வாரியம் தொடர்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 686 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவி்ட்டார்.
இன்று (18.11.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு
திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால்கள், நடை பயிற்சி சாதனம்,மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு சிறப்பு பயிற்சி நாற்காலி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் தராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தவசெல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.