Close
நவம்பர் 21, 2024 2:43 மணி

வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்கள்

மதுரை, வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர், தொழிலதிபர்கள் தன்னார்வலர்கள் பங்களிப்போடு வாடிப்பட்டி பேருந்து நிலையம், சாணாம்பட்டி பிரிவு, பாண்டியராஜபுரம் சோதனை சாவடி ஆகிய மூன்று இடங்களில் 35 நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் வாடிப்பட்டி பிரிவிலிருந்து நகர்ப்புற சாலையில் கால்நடை மருத்துவமனை வரை 25 இடங்களில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடந்த திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமைதாங்கி குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டு மற்று சோதனை சாவடியை திறந்து வைத்தார். சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.

காவல் ஆய்வாளர் வளர்மதி வரவேற்றார். இந்த விழாவில், பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன், கவுன்சிலர் இளங்கோவன், ஹலோ ஆர்ட்ஸ் மகேந்திரன், வர்த்தக சங்கத் தலைவர் பாலச்சந்திரன், பொருளாளர் கேசவன், காவல் உதவி ஆய்வாளர்கள் கணேஷ்குமார், துரை முருகன், கஜேந்திரன், சரஸ்வதி, நிலைய எழுத்தர்கள் நாகராஜ், உக்கிர பாண்டியன் மற்றும் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top