Close
ஏப்ரல் 3, 2025 12:33 மணி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் வருகின்ற 20.11.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது
நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 27.11.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசாணை (நிலை) எண்:22 நாள்: 29.01.2024-ன் படி மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலர்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, திருப்புவனம் வட்டத்தில் வருகின்ற 20.11.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 27.11.2024 அன்று திருப்புவனம் புதூரில் அமைந்துள்ள பி.கே மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top