திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2024-2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கும் திருவள்ளுவர் திருநாளில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2024-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2025-ஆம ;
ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட இருப்பதால் 2024-2025ஆம் ஆண்டிற்கான ”டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ளுமாறும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை 25.11.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.