மதுரை மாவட்டம், திருவாலவாயநல்லூர் ஊராட்சி மன்றம் பகுதியில் , மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் சகுபர்சாதிக், துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தனர்.
உதவி ஆளுநர் சோமசேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன், சங்கத் தலைவர் வாசுதேவன், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் கன்னியப்பன், முன்னாள் தலைவர்கள் சந்தீப், கணேசன், தாமரை கண்ணன், ஆடிட்டர் சேது மாதவன், பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர் சாந்தாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள தெருவில் சுமார் 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. ரூபாய் 20,௦௦௦/- மதிப்புள்ள பாதுகாப்பு வேலிகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. ஊர் நிர்வாகம் சார்பில் கன்றுகள் ஊன்றும் பணி நடைபெற்றது .