Close
ஏப்ரல் 3, 2025 3:20 காலை

திருச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் அன்பழகன் ஆய்வு

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் மு.அன்பழகன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் மு. அன்பழகன், நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், உதவி ஆணையர் சாலை தவவளன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சண்முகப்பிரியா, எல்ஐசி சங்கர், சுகாதார ஆய்வாளர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மருத்துவர் அறை ஊசி மற்றும் சுருள் படம் எடுக்கும் இடம், மருந்து கிடங்கு, ஆய்வகம், காய்ச்சல் உள்நோயாளிகள் பிரிவு,

பெண்கள் நல மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ அறை பேறுகால பின்கால கவனிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அறைகளை பார்வையிட்டார்.

மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்த்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், சுப்ரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக புதிதாக தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டப்படும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top