Close
நவம்பர் 22, 2024 6:35 மணி

ஆதார்,வாக்காளர் அட்டை வழங்க கோரி இருளர் சமுதாயத்தினர் தர்ணா

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இருளர் சமுதாய மக்கள்.

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு ஆதார அட்டை, வாக்காள் அடையாள அட்டை ஆகியவை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இருளர் இன மக்களுக்கு வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று கூறிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், பாதிரி, சலுக்கை, மழவங்கரணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின இருளர் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால் பழங்குடியினர் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத் தலைவர் அப்துல் காதர் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருளால் சமுதாய மக்களுக்கு ஆதார் அட்டை, வக்கால் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கும் முகாமை வருவாய்த் துறையினா் சரிவர நடத்துவதில்லை என புகாா் தெரிவித்து, உடனடியாக ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினாா்.

இதனைத் தொடர்ந்து செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கா.யாசாராபத், மாரிமுத்து, பிரபாகரன், சுகுணா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோந்த பழங்குடி இருளர் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top