Close
மே 21, 2025 7:25 மணி

திருச்சுழியில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறப்பு

திருச்சுழியில் திறந்து வைக்கப்பட்ட டிஜிட்டல் உதவி மையம்.

திருச்சுழியில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறப்பு விழா  நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் சுவஸ்தி நிறுவனம் சார்பாக தாலுகா அலுவலக வளாகத்தில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு ஸ்பீச் நிறுவன இயக்குனர் பொன்னமுதன் தலைமை வகித்தார். தாசில்தார் சிவக்குமார் நாஸ்கம் பவுண்டேசன் நிறுவன உதவி மேலாளர் ரித்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சுழி ஒன்றிய குழுத் தலைவர் பொன்னுத்தம்பி ,
மக்கள் உதவி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஸ்பீச் நிறுவன நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர்பாளர் பிச்சை, சுவஸ்தி நிறுவன நிர்வாகி பூபதி மற்றும் கள அலுவலர்கள் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top