நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே ரூ. 170 கோடி மதிப்பில், புதிய ரோடு அமைக்கும் பணியை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கதிராநல்லூர் பஞ்சாயத்து, நத்தமேடு முதல் கண்ணூர்பட்டி பஞ்சாயத்து கீழ்கஞ்சநாயக்கனூர் வரை, ரூ. 1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், 2 கி.மீ தூரத்திற்கு தார் ரோடு அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையொட்டி ரோடு அமைக்கும் பணிக்கான பூமிபூஜை, நத்தமேடு கிராமத்தில் நடைபெற்றது. புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் விழாவில் கலந்துகொண்டு புதிய ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தரணிபாபு, கவிதா முருகேசன், கண்ணூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், திமுக கிளை செயலாளர்கள் விக்னேஷ்வரன், நடராஜன், சின்ன பாப்பு, ராமசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.