Close
ஏப்ரல் 4, 2025 10:57 காலை

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது புகார்

கோபி அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோபியைச் சேர்ந்த முதியவரான அய்யாச்சாமி என்பவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் உள்ளதை அறிந்துகொள்ள சென்றார். அப்போது, அங்கிருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி ஆனந்தன் என்பவர் முதியவரான அய்யாசாமியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதியவர் அய்யாசாமி கோபி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஆனந்தனிடம் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top