Close
நவம்பர் 26, 2024 6:43 காலை

தூய்மை அருணை சார்பில் குளங்கள் சீரமைக்கும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர்..!

தூய்மை பணியை தொடங்கி வைத்து அமைச்சர் மற்றும் ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை அருணை சார்பில் 20 குளங்கள் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலை தூய்மை அருணை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்கள் சீரமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டு குளம் அருகில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம் துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த ஏழு ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களை அமைப்பாளராக கொண்டு தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு நான்கு மேற்பார்வையாளர்களும் 39 வார்டுகளுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மை பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மை காவலர்கள் என ஆயிரக்கணக்கான மரம் நடுதல் பராமரித்தல் கால்வாய் மற்றும் குளங்களை தூர்வாருதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்களை தூய்மை கருணை அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சீரமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் முதல் கட்டமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டுக்குளம் சீரமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் தூய்மை அருணையின் அமைப்பாளருமான வேலு தொடங்கி வைத்தார்

அதனைத் தொடர்ந்து தூய்மை அருணை தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற ஆன்மீக பூமி தினமும் கோவிலுக்கு பல லட்சக்கணக்கான ஆன்மீகப் பெருமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாடு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறனர்.

அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாடவீதி கிரிவலப் பாதை நகரப் பகுதி அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தூய்மை அருணை என்ற அமைப்பை ஏற்படுத்தி 7 ஆண்டு காலமாக நடத்தி வருகிறோம். இந்த அமைப்பிற்கு நான் அமைப்பாளராக உள்ளேன்.

தூய்மை அருணையின் பணியின் ஒரு பகுதியாக கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்கள் முட்புதர்களாகவும் செடிகள் வளர்ந்த காரணங்களால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை பணியில் ஈடுபடும் பணியாளர்களும், தூய்மை அருணை தன்னார்வலர்களும் இணைந்து ஆட்சியர் தலைமையில் கிரிவலப் பாதையில் உள்ள 20 குளங்களை தூர்வார வேண்டும் சுத்தப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகளை தொடங்கி வைத்துள்ளோம் என அமைச்சர் கூறினார்.

ஒரு மணி நேரத்தில்

ஒரு மணி நேரத்தில் இருந்த செடி கொடி முட்களை அகற்றியும் மண்மேடு களை அகற்றியும் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
கிரிவலம் சென்று கொண்டிருந்த வெளி மாநில வெளி மாவட்ட பக்தர்கள் தூய்மை பணிகள் நடைபெறுவதை பார்த்து அமைச்சர் மற்றும் ஆட்சியர் அங்கு இருந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், தூய்மை அருணையின் மேற்பார்வையாளர்கள் எ.வ.வே.கம்பன், ஸ்ரீதரன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், எழில்மாறன், குணசேகரன், நேரு ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top