Close
ஏப்ரல் 3, 2025 12:34 மணி

அந்தியூர் அருகே பெரிய ஏரி படகு இல்லத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

அந்தியூர் அருகே பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவ.26) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில், அந்தியூர் பெரிய ஏரியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் என்று அழைக்கப்படும் படகு இல்லம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா இன்று (நவ.26) நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக படகு இல்லத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் படகில் சவாரி செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top