நாமக்கல்:
புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை 30ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சப்ளை நிறுத்தி வைக்கப்படும்.
இதனால், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்ச்சதிரம், பாச்சல், பிடாரிப்பட்டி, முணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி மற்றும் புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை பெறும் பகுதிகளில், நாளை 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.