திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணீயர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டினை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த மாநாடு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல் சமது, மாவட்ட முதன்மை ஆணையர் அறிவொளி சேர்மன் அமிர்தவள்ளி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.