Close
டிசம்பர் 4, 2024 8:46 காலை

சிவகங்கை மாவட்டத்தில் 19 விவசாயிகளுக்கு ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அ4ித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,
19 விவசாயிகளுக்கு ரூ.26.08 இலட்சம் மதிப்பீட்டான
அரசின் நலத்திட்ட உதவிகளை , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துப் பைப் லைன்  பதித்து தரக்கோருதல், 2023-2024 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்க கோருதல், தரிசு நில மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்த
கோருதல், பேட்டரி தெளிப்பான் மற்றும் மின் உற்பத்திக்கான பின்றேப்பு மானியம் வறட்சி நிவாரணம் வழங்கக்கோருதல், பி. கோருதல். பி.எம்.கிசான் திட்டத்தில் உதவித்தொகை வழங்குதல், PM KISAN திட்டத்தில் நிதி பெற்று தரக் கோருதல், கண்மாய் கருவேல் மரங்களை ஏலமிடுதல், பி.எம்.கிசான் திட்டத்தில் E-KYC முகாம் நடத்துதல், புதிய வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டக் கோருதல், மானியத்தில் பறவை தடுப்பு வலை வழங்குதல், தென்னை மரம் மற்றும் கருவேல மரம் அகற்றி நிவாரணம் வழங்க கோருதல், கண்மாய் பெரியமடையை பலப்படுத்துதல், தேனீ வளர்ப்பு பெட்டி மானியத்தில் வழங்குதல், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து தரக்கோருதல், வெளி மாநில சுற்றுலா பயிற்சிக்கு அழைத்து செல்ல கோரிக்கை,
மானியத்தில் உழவு இயந்திரம் வழங்குதல், மின் இணைப்பு வழங்குதல், தார்சாலை அமைத்தல் விவசாயிகள் சோலார் அமைப்புடன் கூடிய விளக்குப் பொறி மானியத்தில் வழங்குதல்,, பவர் டிரில்லர் மானியத்தில் வழங்குதல், பயிர் காப்பீடு வழங்குதல், உழவு மானியம் வழங்குதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் பழுதான மின்கம்பத்தினை சரிசெய்தல், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், விளை
நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுபடுத்துதல்
,
மின் இணைப்பு கூடுதல் பீடர் மற்றும் மின்கம்பிகள் பொருத்துதல், கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்குதல், தாட்கோ மூலம் ஆடு வளர்ப்பதற்கு கடனுதவி வழங்குதல், உபரி நீர் வழங்குதல், உரம் இருப்பு ஆகியவை தொடர்பான விவரம் கோருதல்,  கண்மாய் மூலம் தண்ணீர் வழங்குதல், சேதமடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல், கிராமச்சாலையை சரிசெய்தல், கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட கோருதல், சூரிய ஒளி மின் மோட்டார் வழங்க கோருதல்,
சொட்டு நீர் பாசனம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
கட்டுதல் மானியத்தில் வேளாண் இயந்திரங்களுக்கான வாடகை சேவை மையம் அமைத்தல், உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு டிராக்டர் வழங்குதல், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெருமளவு வாகனங்கள், பழுதான மின்கம்பத்தை மாற்றி தரக்கோருதல், மழைநீர் வரத்துக்கால்வாய் இருபக்கமும் வழங்கப்படுகின்றன. தடுப்புச்சுவர் கட்டுதல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய பதில்களை தெரிவிக்கும்படி,
மாவட்ட ஆட்சித்தலைவரால், அறிவுறுத்தப்பட்டு, அக்கோரிக்கைகள்
மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு, உரிய களஆய்வுகளும் மேற்கொள்ளவும், அண்ணாவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக
துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விபரங்களுடன் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகின்றனர். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு,
வேளாண் தொழிலில் ஈடுபடுவோர் எந்த இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், ஒவ்வொரு மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், நீர்நிலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கை
கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாகப் பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான
மின் விநியோகம் சீரான முறையில் வழங்கவும், தேவையான உரங்களை வழங்கவும், மேலும் வங்கிகளின் மூலம் கடனுதவி வேளாண் புதிய தொழில் தொடங்கி உறுதுணையாக இருந்திடவும், புதிய தடுப்பணைகள் கட்டவும், கடனுக்குரிய மானியத்தொகையின் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், குறிப்பாக இக்கூட்டு விவசாயிகள் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி,
அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை
உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கல்லூரணி, நெல்முடிக்கரை மற்றும் மேலரங்கம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சார்ந்த மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.9,71,500/- மதிப்பீட்டான நெல், வாழை மற்றும் தென்னை ஆகிய பயிர் கடனுதவிக்கான ஆணைகள்,
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், விவசாய இயந்திரத்தின்
துணைத் திட்டம் (SMAM 2024 -2025) ன் கீழ், 03 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய ரூ.9,80,000/- மதிப்பீட்டான டிராக்டர் மற்றும் மானியத்துடன் ரூ.2,26,990/- மதிப்பீட்டான பவர் டிரில்லர் மற்றும் மானியத்துடன் கூடிய ரூ.1,30,500/-மதிப்பீடு செய்யப்பட்ட பவர் வீடர் ஆகியவையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்
துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்
வட்டாரம் பாப்பாகுடி கிராமத்தைச் சார்ந்த பயனாளிக்கு ரூ.3,00,000/- மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர பந்தல் அமைப்பதற்கென பின்னேற்பு மானியத்திற்கான ஆணை என மொத்தம் 19 விவசாயிகளுக்கு ரூ.26,08,990/- மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள்,
மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  செல்வசுரபி, இணைப்
பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், வேளாண்
பொறியியல் செயற்பொறியாளர் சாந்தி சகாய சீலி, தோட்டக்
கலைத்துறை துணை இயக்குநர் குருமணி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முதன்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top