Close
டிசம்பர் 4, 2024 6:57 மணி

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக
கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை 
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த்,
சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம் ஆனையூர் பகுதியில் தீவிரமாக வந்தது. பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் மதுரை மாநகரின் மையப்பகுதியில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு 27.08.2023 அன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.11 அழகர்கோவில் மெயின் ரோடு சர்வேயர் காலனி சம்பக்குளம் ரவுண்டானர அருகில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் தொடங்கப்பட்டு
தற்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது. .

இந்த புதிய கட்டிடம் மொத்தம் 14654 சதுரடியில் கட்டப்பட்டு உள்ளது. இக்கட்டிடம் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் ஆகிய மூன்று தளங்களாக அமைக்கப்பட்டது

தரை தளத்தில் பதிவு வைப்பறை, சர்வேயர் அறை, கண்காணிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் அறை, சுகாதார அலுவலர், தேர்தல் அறை, உதவி செயற்பொறியாளர்கள் அறை, கருவூலம் அறை, வரவேற்பு அறை,
பொது அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை
முதல் தளத்தில் மண்டலத் தலைவர் அறை, கருத்தரங்கு கூட்ட அறை, தணிக்கை அறை, உதவி பொறியாளர்கள், கணினி அறை, நிர்வாக அலுவலர் அறை, காத்திருப்போர் அறை, பொது அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் லிப்ட் மற்றும் தலைமை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இக்கட்டிடத்தில், மின்வசதிகள்,குடிநீர் வசதிகள், சுற்றுச்
சுவர்கள், பேவர் பிளாக் சாலை வசதிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள கிழக்கு மண்டல அலுவலக கட்டிடத்தை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், இன்று (29.11.2024) பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்
தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா,
உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், செயற்பொறியாளர்
சேகர், செயற்பொறியாளர்கள் காமராஜ், திருமயிலேறிநாதன், உதவிப்
பொறியாளர்கள் முருகன், சோலைமலை, பாபு, மாமன்ற உறுப்பினர் செங்கிஸ்கான் மற்றும் கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top