உசிலம்பட்டியில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு
18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள், கடைகள், குடோனுக்கு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்து அதைக் கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில்,
இந்த தீர்மானத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசுகளும் எதிர்க்கவில்லை எனவும், வணிகர்களுக்கு
ஏற்படும் பாதிப்பை சரி செய்ய ஜி.எஸ்.டி. . மாநில கவுன்சில் தீர்மானத்தை ஒத்திவைத்து, முழுமையாக நீக்கம் செய்ய மத்திய, அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள், காய்கறி கடைகள், மொத்த
விரைவு கடைகள் மற்றும் தேனி சாலை, பேரையூர் சாலை, வத்தலக்
குண்டு சாலை, மதுரை சாலையில் உள்ள கடைகள் என, சுமார் 2000 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.