Close
டிசம்பர் 4, 2024 7:13 மணி

மதுரையில் சாலை விதி மீறும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத போலீசார்

மதுரையில் பஸ் நிறுத்தத்தில் குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ.

மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்
படுகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில் அண்ணா நகர், சுகுணா ஸ்டோர் பஸ் நிறுத்தம், அண்ணா நிலையம், கருப்
பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளி நிறுத்தம், சிம்மக்கல் பஸ் ஸ்டாப், பெரியார் நிலையம் , புதூர், கே. கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பொது மக்களுக்கும், அரசு பஸ் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை நகரில் பல ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் வரிசையாக நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் பஸ்ஸில் பயணம்
செய்ய இடையூறாக உள்ளதாகவும், இது குறித்து,
மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையர், கூடுதல் ஆணையர், உதவி ஆணையர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவித்தும், ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படவில்லை என, பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

மதுரை நகரில், அண்ணா நகர், அண்ணா நிலையம், சிம்மக்கல், பகுதிகளில் ஆட்டோக்கள் அரசு பஸ்கள் போல, பயணிகளை கூவி வலுக்
கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றுவதாகும்,மேலும், அதிகளவில் ஆட்டோக்களை பயணிகளை ஏற்றி பயணம் மேற்
கொள்வதாகவும், பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை அண்ணா நகரில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பஸ்கள் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து, பெரியார் செல்லும்
பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்குள் வழக்கம்
போல நின்று செல்ல வேண்டும். அண்ணா பஸ் நிலையத்தில் வெளிப்
புறங்களில் பஸ் நிறுத்துவதால் ஆட்டோ தொல்லை அதிகம் இருப்பதாகவும், பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, மதுரை போக்குவரத்து துணை ஆணையர், கூடுதல் ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் தனி கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கரத்தில் வாகனத்தில் பயணிப்
பவரை பாய்ந்து பிடிக்கும் போலீசார், விதியை மீறும் ஆட்டோக்களை பிடிக்க ஏன் தயங்குகின்றனர் என, சமூக ஆர்வலர் கேள்வி விடுத்
துள்ளனர். மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த மாநகர போக்குவரத்து போலீசார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்து அவ்வப்
போது ,மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார்
வாகன ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top