Close
ஏப்ரல் 2, 2025 10:39 காலை

மதுரையில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி: ஆய்வு செய்தார் மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் தீவிர தூய்மை பணிகளை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்வதை,
மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (30.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் (மாஸ் கிளீனிங்) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக மண்டலம்-1 வார்டு எண். 3 ஆனையூர் பகுதிகள், மண்டலம்-2 வார்டு எண்.27 செல்லூர் பகுதிகள், மண்டலம்-3 வார்டு எண்.69 பொன்மேனி பகுதிகள்,மண்டலம்-4 வார்டு எண்.89 சிந்தாமணி பகுதிகள், மண்டலம்-5 வார்டு எண்.100 அவனியாபுரம் பகுதிகள் உள்ளிட்ட வார்டு பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. .

இன்று (30.11.2024) மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்வதை, மேயர் நேரில் பார்வையிட்டார். ஐந்து மண்டலங்களில் இன்று நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளில் மொத்தம் 283 தூய்மைப் பணியாளர்கள், 5 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 5 சுகாதார அலுவலர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் தீவிர தூய்மைப் பணிக்காக 3 ஜெ.சி.பி.இயந்திரங்கள், 1 ரோபோ வாகனம், 8 டிராக்டர்கள், 3 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.

தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.23 பாக்கியநாதபுரத்தில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ்
தொட்டியினை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்
பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் சேகர், உதவிசெயற்பொறியாளர்
காமராஜ், சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், பிச்சை, சிவசுப்பிரமணியன்,
கோபால்,திருமால், சுகாதார ஆய்வாளர் ஓம்சக்தி, மாமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி,குமரவேல், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top