திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் தசரதன் தங்கலட்சுமி, பள்ளியின் தலைமை ஆசிரியர்
எம் ரமேஷ் குமார் ,பள்ளியின் செயலர் ராகவன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பி்ல் மகேஷ் பொய்யாமொழி இந்தியாவிலேயே இன்றைய தினம் நாட்டு நல பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு. மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சக மாணவர் தனது நண்பர்கள் கேட்கும் பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களை விளக்கி அவர்களையும் தேர்வில் வெற்றி பெற உதவ வேண்டும் என்று நம் முதல்வர் கூறுவது போன்று மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.