தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா டிசம்பர் 3ம் தேதிக கொண்டாடப்பட இருக்கிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிசம்பர் – 2 ஆம் தேதி அன்று வெளியூரில் இருப்பதால், டிசம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக தொண்டர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற உள்ளார்.
இந்த நிகழ்வில் மாநில – மாவட்ட – மாநகர, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள்,
அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.