Close
டிசம்பர் 4, 2024 6:51 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை: கொல்லிமலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. கொல்லிமலையில் 2 நாõட்களில் 183 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று கொல்லிமலை பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை முதல் மாலை வரை விட்டு விட்டு லேசான மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் குளிரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினார்கள்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு துவங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. கொல்லிமலையில் சனிக்கிழமை 80 மி.மீ. மழை பெய்தது. இன்று 103 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தல் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம்:

நாமக்கல் நகரம் 17 மி.மீ., கலெக்டர் ஆபீஸ் 20 மி.மீ., எருமப்பட்டி 25 மி.மீ., குமாரபாளையம் 14.8 மி.மீ., மங்களபுரம் 66.2 மி.மீ., மோகனூர் 19 மி.மீ., ப.வேலூர் 16.5 மி.மீ., புதுச்சத்திரம் 35 மி.மீ., ராசிபுரம் 52 மி.மீ., சேந்தமங்கலம் 39 மி.மீ., திருச்செங்கோடு 21 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 103 மி.மீ., மாவட்டத்தில் மொத்தம் 428.5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. கொல்லிமலையில் அதிகபட்சமாக 103 மி.மீ, குமாரபாளையத்தில் குறைந்தபட்சமாக 14.8 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top